பாலத்தில் விரிசல்

Update: 2023-08-02 10:27 GMT

கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் இருந்து ஆதிபராசக்தி கோவில் வழியாக நடுக்கூடலூருக்கு செல்லும் சாலையில் உள்ள சிமெண்டு பாலம் மிகவும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. தற்போது பெய்யும் தொடர் மழையால் மேலும் பாலம் சேதம் அடைந்து வருகிறது. இதனால் வாகனங்கள் செல்லும்போது உடைந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்