தேனி பகவதியம்மன் கோவில் தெரு முக்கிய கடைவீதியாக திகழ்கிறது. இந்த கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. சில கடைக்காரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து படிக்கட்டுகள் கட்டியுள்ளதால் மக்கள் நடந்து செல்வதற்கு கூட சிரமம் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.