கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலாவில் இருந்து அட்டி செல்லும் சாலையில் ரேஷன் கடைக்கு அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால், கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலையும் சேதம் அடைகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அடைப்பை நீக்கி கழிவுநீர் தடையின்றி வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.