தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

Update: 2023-07-26 10:05 GMT

கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் ராக்லேன்ட் தெருவுக்கு திரும்பும் இடத்தில் நெடுஞ்சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் மழைநீர் வழிந்தோடுவதால் குடியிருப்புக்குள் தண்ணீர் செல்லும் நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்