கூடங்குளம் கீழ பஜாரில் உள்ள சுகாதார வளாகம் போதிய பராமரிப்பற்ற நிலையில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இங்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால், கழிப்பிடத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பிடத்தை முறையாக பராமரித்து போதிய தண்ணீர் வசதி செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.