நடைபாதையில் புதர்கள்

Update: 2023-07-09 10:06 GMT

கூடலூர் ராஜகோபாலபுரத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் கிளை நூலகம் முன்பு உள்ள நடைபாதையில் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதன் கிளைகள் சில நேரங்களில் நடந்து செல்பவர்களின் முகம் மற்றும் கண்களில் உரசி காயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் விஷ ஜந்துகளின் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்