மூலக்கடை கிராமத்தில் சிறப்பாறை ஓடை அருகே காலை 6 மணி முதல் சட்டவிரோத மது பாட்டில்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மதுபாட்டில்களை வாங்கி குடிக்கும் சிலர் சாலையோரங்களில் போதையில் தகராறு ஈடுபடுவதால் அந்த வழியாக கூலி வேலைகளுக்கு செல்லும் பெண்கள் மிகுந்த அவதியூற்று வருகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுத்து சட்ட விரோத மது பாட்டில் விற்பனையை தடுக்க வேண்டும் வேண்டும்.