கூடலூரில் நகராட்சி அலுவலகம் உள்ள பகுதியில் ஊட்டிக்கு நெடுஞ்சாலையும், ஓவேலிக்கு நெடுஞ்சாலையும் செல்கிறது. இந்த சாலைகள் இணையும் இடத்தில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். இல்லையெனில் இரும்பு தடுப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.