தேவாரம் பஸ் நிலைய வளாகத்தில் பூட்டிய நிலையில் உள்ள கடைகள் முன்பு சிலர் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுச்செல்கின்றனர். மேலும் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ் நிலைய வளாகம் தற்போது திறந்தவெளி பாராக மாறி வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.