பொது கழிப்பிடம்

Update: 2023-06-11 12:15 GMT

பந்தலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் நம்பியார்குன்னு பகுதி உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் பொது கழிப்பிடம் எதுவும் இல்லை. இதனால் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிப்பட நேரிடுகிறது. குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அங்கு பொது கழிப்பிடம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்