சாலையில் தேங்கும் மழை நீரால் அவதி

Update: 2023-06-11 12:05 GMT

கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் ராக்லேண்ட் தெருவுக்கு திரும்பும் பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கி வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்லும் பொதுமக்கள் மீது மழைநீர் தெளிக்கிறது. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இது தவிர கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையில் மழைநீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்