காற்றில் பறந்த மேற்கூரை

Update: 2022-07-23 11:46 GMT

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் இருந்த மேற்கூரை கடந்த சிலை மாதங்களுக்கு முன்பு அடித்த பலத்த காற்றில் சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது. இந்த மேற்கூரை தற்போது வரை சீரமைக்காமல் உள்ளதால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்க மேற்கூரையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்