பந்தலூர் தாலுகா அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு அவர்கள் பயன்படுத்த கழிப்பறை எதுவும் இல்லை. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள் படும்பாடு சொல்லி மாளாது. எனவே பொதுமக்களின் வசதிக்காக அங்கு கழிப்பறை கட்டி கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.