கூடலூர் நகருக்குள் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.