கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே பொது கழிப்பறை கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் கிடக்கிறது. தற்போது பயன்படுத்த முடியாத வகையில் பழுதடைந்து விட்டது. இதனால் அரசு அலுவலகங்களுக்கு வரும் கிராமப்புற மக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிப்பறையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.