பந்தலூர் அருகே உப்பட்டியில் இருந்து அத்திகுன்னா செல்லும் சாலையோரத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனருகில் கழிப்பிடம் ஒன்று இருக்கிறது. இந்த கழிப்பிடம் எப்போதும் மூடியே கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவசர தேவைக்கு கூட அந்த கழிப்பிடத்ைத பயன்படுத்த முடியவில்லை. எனவே அந்த கழிப்பிடத்தை திறக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.