முறிந்து தொங்கும் மூங்கில்கள்

Update: 2023-04-12 09:42 GMT

கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலையில் 3-ம் மைல், நெலாக்கோட்டை ஆகிய இடங்களில் காய்ந்து போன மூங்கில்கள் முறிந்து சாலையோரம் தொங்குகிறது. அவை எந்த நேரத்திலும் சாலையில் செல்லும் வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் விழ காத்திருக்கிறது. எனவே பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காய்ந்து போன மூங்கில்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்