கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் வெளிமாநில மக்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். அங்கு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் வருகைக்காக காத்து நிற்கின்றனர். ஆனால் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழையில் திறந்தவெளியில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைத்து தர வேண்டும்.