மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-03-05 14:47 GMT
ஆண்டிப்பட்டி அருகே நாச்சியார்புரத்தில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்தது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ம் ஆண்டு புதிதாக நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் தற்பொது வரை திறக்கப்படவில்லை. இதனால் நீர்த்தேக்க தொட்டி காட்சிபொருளாகவே உள்ளது. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்