பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மாரியம்மன் கோவில்பட்டிக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் வணிக வளாகம் உள்ளது. இது பல ஆண்டுகளாக பூட்டி கிடப்பதால் காட்சி பொருளாக உள்ளது. அதில் உள்ள கடைகள் அனைத்தும் சேதம் அடைந்துவிட்டன. வணிக வளாகத்தை சீரமைத்து திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.