கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோழிக்கோடு, மலப்புரத்துக்கு செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பஸ்கள், வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் ஏராளமானவர்கள் சாலையோரம் காத்துக்கிடக்கின்ற நிலை உள்ளது. ஆனால் இதுவரை பயணிகள் நிழற்குடை அமைக்காததால் வெயில் மழையில் நின்று சிரமம் அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.