மயிலாடும்பாறை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கடந்த ஆண்டு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் மயிலாடும்பாறை கிராம நிர்வாக அலுவலகம் சேதமடைந்த கட்டிடத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.