பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு அருகே வனச்சரகர் அலுவலக பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடைக்கு தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் உள்பட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் நிழற்குடை பழுதடைந்து கிடக்கிறது. மேலும் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது குடித்துவிட்டு, காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் வீசி செல்கின்றனர். இதனால் குப்பை கூளமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அங்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.