முத்தாலம்பாறை கிராமம் வழியாக செல்லும் அருகுவெளி ஓடையில் மழைக்காலங்களில் மூன்று மாதம் வரை நீர்வரத்து காணப்படும். இந்த நீர் வைகை ஆற்றில் கலந்து வீணாகி வருகிறது. எனவே நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் ஓடையில் குறுக்கே ஆங்காங்கே புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும்.