கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்தது ஆகும். இங்கு கிளப்ரோடு செல்லும் சாலை பிரிவில் கட்டிட கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன்காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.