கோத்தகிரி புயல் நிவாரண கூடம் அருகே தாசில்தார் அலுவலகத்திற்கு செல்லும் சாலை, நூலகத்தில் இருந்து ராம் சந்த் சதுக்கம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சாலைகள் மிகவும் மோசமாகிவிடுகிறது. எனவே ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் இந்த சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.