மண்சரிவால் வீடுகள் பாதிப்பு

Update: 2023-01-01 14:02 GMT

பந்தலூர் அருகே மழவன்சேரம்பாடியில் காளிகோவில் அருகில் இருந்து சாமியார் மலைக்கு செல்லும் நடைபாதையை ஒட்டி ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் பின்புறம் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் மண்சரிவு தொடர்வதால், வீடுகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்