தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை

Update: 2023-01-01 13:55 GMT

கூடலூர் கிளை நூலகத்தின் முன்பு மண்மேடு உள்ளது. இங்கு தொடர் கனமழை பெய்ததால் மெல்ல மெல்ல மண் சரிவு ஏற்பட்டு காணப்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மண் விழுந்து கிடக்கிறது. இதனால் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நடைபாதை மூடும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்