தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வரும் புதுவாய்க்காலில் 13-வது மடை பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் அந்த மடை பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த வாய்க்காலை சீரமைக்க வேண்டும்.