கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றோடொன்று சண்டையிட்டு கொள்வதோடு அந்த வழியாக வரும் பொதுமக்களையும் கடிப்பதற்காக துரத்தி வருகிறது. இதனால் காலையில் நடைபயிற்சி செல்வோரும், பிற தேவைக்காக வரும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தபட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.