கச்சிராயப்பாளையம் அடுத்த கொடுந்துறை அருகே கல்வராயன்மலை செல்லும் சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் போது விபத்தில் சிக்கி பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.