கொசுத்தொல்லையால் மக்கள் அவதி

Update: 2022-12-21 12:22 GMT

கூடலூரில் பழைய பஸ் நிலையம், காசிம்வயல், மைக்கா மவுண்ட், புஷ்பகிரி, ஐந்துமுனை சந்திப்பு பகுதி உள்பட பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மாலை மற்றும் இரவில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்து கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்