கோத்தகிரி கடைவீதி அருகே உள்ள பொது மயானம் உரிய பராமரிப்பின்றி உள்ளதுடன் நீரோடையை ஓட்டிச் செல்லும் பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாமல் உள்ளது. அங்கு சுற்றுச்சுவர் கட்டப்படாததால் வன விலங்குகள் மயானதிற்குள் நுழைந்து முகாமிட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மயானத்தில் தடுப்புச் சுவர் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.