கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட பழைய மாணவ, மாணவியர் விடுதிகள், குடியிருப்புகள் உள்ளிட்டவை பயனின்றி கிடக்கின்றன. இந்தக் கட்டிடங்களை பராமரித்து, சொந்தக் கட்டிடம் இல்லாத பிற துறை அரசு அலுவலகம் அமைக்கவோஅல்லது மாற்று பயன்பாட்டிற்கு பயன்படுத்தி அரசுப் பணம் விரையமாகாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.