கோத்தகிரி பஸ் நிலையத்தின் தரைத்தளம் உடைந்து, ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு உள்ளது. மேலும் அதில் உள்ள கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு கிடக்கின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. சில நேரங்களில் பஸ் சக்கரத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் நிலவுகிறது. எனவே உடைந்த தரைத்தளத்தை புதுப்பிக்க வேண்டும்.