தெருநாய்கள் தொல்லை

Update: 2022-12-04 14:08 GMT

கோத்தகிரி கடைவீதி ஆட்டுக்கறிககடை அருகே உள்ள சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அவ்வழியாக நடந்து செல்வோரை கடிக்க துரத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் நாய்க்கடிக்கு பயந்து நடந்து சென்று வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இதே நிலைதான். எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்