தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் டிராக்டர், மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு நடந்து வருகிறது. குறிப்பாக வராக நதி, மஞ்சளாற்றில் மணல் அள்ளப்படுவதால் இயற்கை வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மணல் திருட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.