கோத்தகிரி கடைவீதி அருகில் இந்துக்கள், கிறிஸ்துவர்களுக்கான பொது மயானம் உள்ளது. இந்த மயானம் சுற்றுச்சுவர் கட்டப்படாமலும், உரிய பராமரிப்பு இன்றியும் உள்ளது. மேலும் கரடி, காட்டெருமை மற்றும் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் உள்ளதால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே மயானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டி நடைபாதை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.