ஓடையில் மண் அள்ளும் கும்பல்

Update: 2022-09-22 17:33 GMT
தேவதானப்பட்டி முருகமலையில் இருந்து கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி வழியாக செல்லும் பெரிய ஓடை உள்ளது. இந்த ஓடையில் மர்மகும்பல் டிராக்டர் மூலம் செம்மண் அள்ளி வருகின்றனர். இதனால் ஓடையில் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அதோடு ஓடையின் நீர்வழிப்பாதை பாதிக்கப்படும் சூழலும் உள்ளது. எனவே ஓடையில் மண் அள்ளும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்