ஆனைமலையில் உள்ள வேளாண்மை அலுவலக கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு மேற்கூரையில் பல இடங்களில் கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்து இரும்பு கம்பி வெளியே தெரிகிறது. இதனால் இங்கு வரும் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.