மது பாராக மாறிய பள்ளி வளாகம்

Update: 2022-09-02 16:26 GMT

கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வளாகத்தை மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் மது குடிக்கும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாள்தோறும் காலை நேரங்களில் பள்ளி வளாகத்தில் போடப்படும் மது பாட்டில்களை அப்புறப்படுத்துவதே ஆசிரியர்களின் பணியாக உள்ளது. எனவே போலீசார் நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்