தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பல மாதங்களாக பூட்டிக் கிடக்கிறது. இதனால் பசிக்கு அழும் குழந்தைகளுடன் தாய்மார்கள் தவிக்கும் காட்சிகளை பஸ் நிலையத்தில் அதிகம் பார்க்க முடிகிறது. எனவே இந்த பாலூட்டும் அறையை சுத்தம் செய்து மீண்டும் பயன்பட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.