19 March 2023 5:07 PM GMT
#29356
பழுதாகும் அரசு பஸ்களால் மாணவர்கள் அவதி
வாணியம்பாடி
தெரிவித்தவர்: சந்திரன்
திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. தற்போது பிளஸ்-டூ பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்கள் தேர்வு நேரங்களில் பழுதடைந்து நின்று விடுகின்றன. இதனால் குறித்த நேரத்தில் தேர்வு மையத்துக்கு செல் முடியாமல் மாணவர்கள் பலர் அவதிப்படுகின்றனர். எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசு பஸ்களை சரியான நேரத்தில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், ராமநாயக்கன்பேட்டை.