20 Oct 2024 2:39 PM GMT
#50746
பஸ் நிலையத்திற்குள் வராமல் செல்லும் பஸ்கள்
திருவெண்ணெய்நல்லூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்திற்குள் திருக்கோவிலூர், விழுப்புரம், பண்ருட்டி மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் உள்ளே செல்லாமல் அணைக்கட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.