29 Sep 2024 6:40 AM GMT
#50110
போக்குவரத்து நெரிசல்
ஊட்டி
தெரிவித்தவர்: ரோஜா
ஊட்டி கமர்சியல் சாலை கேசினோ சந்திப்பில் இருந்து பிரிக்ஸ் பள்ளி வழியாக கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.