9 Jun 2024 4:05 PM GMT
#47392
நடவடிக்கை தேவை
திருப்பரங்குன்றம்
தெரிவித்தவர்: காந்திமதி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இங்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த போதுமான இட வசதி இல்லாததால் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.