12 May 2024 2:04 PM GMT
#46622
வேகத்தடை அமைக்கப்படுமா?
கூடலூர்
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன்
மேல் கூடலூர் ஓ.வி.எச். சாலை போக்குவரத்து நிறைந்த ரோடாக உள்ளது. இதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனால் அந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடக்க முடிவதில்லை. இதன்காரணமாக மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதேபோல் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் அந்த சாலையில் பொதுமக்கள் சாலையை கடக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.