5 May 2024 12:50 PM GMT
#46452
பாலம் சீரமைக்கப்படுமா?
கூடலூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புஞ்சைக்கொல்லியில் இருந்து காரக்கொல்லி செல்லும் பகுதியில் ஓடை கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாய் மீது பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பாலம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த பாலத்தை பயன்படுத்தும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர். அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் முன்பாக, அந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.