21 April 2024 5:42 PM GMT
#46206
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
வத்தலக்குண்டு
தெரிவித்தவர்: சுந்தரம்
தற்போது கோடைகாலம் என்பதால், வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். எனவே வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.