31 March 2024 5:06 PM GMT
#45658
இரவு நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுமா?
திண்டுக்கல் ரெயில் நிலையம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு ெசல்வதற்கு இரவு நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் ரெயில் வரும் பொதுமக்கள் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு நடந்து செல்கின்றனர். மேலும் சிலர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்கின்றனர். எனவே இரவு நேரத்தில் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.